SYF காரியாளயம் திறப்பு விழா

1490வது மீலாத்தின விழா..!!

Filled Under:

இமாம் ஹுஸைன ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கடைசி கணங்கள்


இமாம் ஸையுதுனா ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு யுத்தக்களத்தினுள் குதித்தார்கள். உடனே எதிரிகள், 25,000 வில் வீரர்களைக் கொண்டு தாக்கினார்கள். பல்லாயிரக் கணக்கான யுத்த வீரர்கள் தம் வாள்களால் தாக்கினார்கள்.
.
கொடியோன் ஷிம்ர் (அல்லாஹ் இவனை நிரந்தரமாய் சபிப்பானாக) கடுமையாக அவர்களை வதைக்கத் தொடங்கினான்.
.
யூப்ரடீஸ் நதியின் நீர் அவர்களை அடையாமல் தடுத்தான். அத்தனை வாழ்க்கை வசதிகளையும் அவர்களை நெருங்காமல் செய்தான். ஆயிரம்ஆயிரம் துன்பங்களும் துயரங்களும் அவர்களைச் சூழ்ந்துக் கொண்டன.
.
இமாம் அலி அக்பர், இமாம் அலி அஸ்கர், இமாம் காஸிம் என ஒருவர் பின் ஒருவராக ஷஹீதாக்கப்பட்டார்கள். மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் மலர் சோலையின் மலர்கள் ஒன்றன் பின் ஒன்றாக (அல்லாஹ்வின் பாதையில்) பறிக்கப்படுவதை இமாமவர்கள் கண்டார்கள். அவர்கள் எல்லாரையும் உயிருடனும் சடலமாகவும் பாசறைக்கு அனுப்பி வைத்தார்கள்.
.
யாவும் அவர்களின் கண்முன்னாலேயே நடந்தேறின. ஆனால் அவர்களின் புன்னகை மாறவில்லை. அவர்கள் அல்லாஹ்வின் நாட்டத்தை ஏற்றுக்கொண்டார்கள். அவர்களின் கால்கள் நடுங்கவில்லை.
.
இந்தச் சூழ்நிலையிலேயே ஜின்களின் படை, தங்களின் அரசனோடு அவ்விடத்துக்கு வந்து சேர்ந்தது. ஜின்களின் அரசன் கூறினான், "பரிசுத்த மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் திருபேரரே! நான் ஜின்களின் அரசன். நான் உங்களின் புகழ் பூத்த தந்தையார் ஸையுதுனா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஷஹாதத் கூறி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களில் ஒருவன்.
.
இப்போது நான் அதற்கு பிராயச்சித்தம் செய்ய வந்துள்ளேன். எங்களுக்கு சைக்கினை மாத்திரமே செய்யுங்கள், கண்மூடி கண்திறப்பதற்குள் இந்த யஸீதின் படைகளை துடைத்தெறிந்து விடுகிறோம்."
.
அது இமாம் அவர்களின் பொறுமைக்கு ஆறுதலாக இருக்கவில்லை. அவர்கள் கூறினார்கள், "நீங்கள் ஜின்கள். நீங்கள் மனிதர்களோடு போர் புரிவது பொருந்தாது. ஜின்களை மனிதர்களால் பார்க்க முடியாது.
.
ஆனால் நீங்கள் பார்ப்பீர்கள். அவர்களோடு நீங்கள் யுத்தம் செய்வீர்கள். அவர்களுக்கு உங்களை எதிர்த்து யுத்தம் செய்ய முடியாது. எனக்கு நீதியற்ற யுத்தம் வேண்டாம். நான் இங்கு நீதியை நிலை நிறுத்த வந்தவன். எனக்கு அநீதியாக நடக்க முடியாது. நான் இங்கு சட்டமும் ஒழுங்கும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே வந்துள்ளேன். அந்தக் கொள்கைக்கு மாற்றமாக எனக்கு நடக்க முடியாது. மனிதர்கள் மனிதர்களோடு யுத்தம் செய்வார்கள். நீங்கள் போகலாம்."
.
ஜின்களின் அரசன் தொடர்ந்து வாதிட்டான், "நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் பங்குபற்றிய பதுர் யுத்தத்தின் போது ஷஹாபா பெருமக்கள் ரலியல்லாஹு அன்ஹும் அவர்களுக்கு துணையாக வானவர்கள் அனுப்பப்பட்டார்களே!"
.
இமாம் பதிலிறுத்தார்கள்,"அது எனது ரப்பு அல்லாஹ்வின் நாட்டமும் கட்டளையும். நீங்கள் போகலாம்"
.
"ஷைகுல் இஸ்லாம்" கலாநிதி முஹம்மத் தாஹிர் அல் காதிரி தாமத் பரகாத்துஹு
.
நன்றி: உமர் அலி
.
தமிழில்: Abdur Raheem Muhammad Jaufer (ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர்)

Copyright @ 2015 syf sainthamaruthu.